Sunday, July 13, 2008

நீ இல்லாத நான்

அலை இல்லாத கடல்

ஆசை இல்லாத மனிதன்

இறக்கை இல்லாத பறவை

உதிரம் இல்லாத இதயம்

ஊன் இல்லாத உடல்

ஒலி இல்லாத தீபம்

ஓசை இல்லாத இசை

மணம் இல்லாத மலர்

மேகம் இல்லாத மழை

வண்ணம் இல்லாத வானவில்

நிலா இல்லாத பௌர்ணமி

இவை போல் தான்

நீ இல்லாத நான்.

காத்திருக்கிறேன்

திக்கு தெரியாத காட்டில், சிறகுடைந்த பறவையாய் வீழ்ந்திருக்கிறேன்.

சிறகாய் வருவாயா,திசை கான்பிப்பாயா, காத்திருக்கிறேன்.

சிந்தனை

சிந்தனை செயல் அனைத்திலும் நீ,

வேதனை வளை விரித்தும் நீ,

எங்கிருந்து வந்தாய் என உனை கேட்டேன்

இதயமாய் இருந்தேன் என துடித்தும் நீ.